பரவலாக பெய்த கனமழை

305

காற்று சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அதன்படி திண்டுக்கல்லில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. 

திண்டுக்கல் பேருந்து நிலையம், நாகல்நகர், பாலகிருஷ்ணாபுரம், சீலப்பாடி, ராஜக்காபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோன்று புதுச்சேரியில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

நகரின் முக்கிய பகுதிகளான உப்பளம், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உருளையன்பேட்டை, லாஸ்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.