அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

402

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் காரைக்காலில் இடியுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்றும் ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.