சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழை

552

சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் 2வது நாளாக நேற்றும் மழை பெய்தது.

நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, வியாசார்பாடி, அண்ணா நகர், மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதைதொடர்ந்து இரவு 10 மணி முதல் சென்னையில் மீண்டும் கனமழை வெளுத்து வாங்கியது.

அடையாறு, மந்தைவெளி, சேப்பாக்கம், எழும்பூர், பாரிமுனை, ராயபுரம், தண்டையார்போட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், தாம்பரம், பூந்தமல்லி, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதேபோன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையினால், தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இந்த மழையினால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.