கஞ்சா விற்பனைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றால் மட்டுமே, கஞ்சா விற்பனையை தடுக்கமுடியும் என புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்….

115
Advertisement

புதுச்சேரியில், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, புதுச்சேரி அரசு அறிவித்த திட்டங்கள் குறித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பொய் தகவல்களை கூறி வருவதாக அவர் தெரிவித்தார். மத்தியில் திமுக காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு மசோதா கொண்டு வரப்பட்டதாகவும், நீட் தேர்வை வைத்து இரு கட்சிகளும் அரசியல் செய்துவருவதாகவும் அன்பழகன் கூறினார்.

சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம், குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஆகிய திட்டங்கள் வரும் ஜூன் மாதம் துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மதுபான கொள்கையில் திமுகவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கஞ்சா விற்பனை நடைபெறும் தொகுதிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களே அதற்கு பொறுப்பேற்றால் மட்டுமே கஞ்சா விற்பனை தடுக்கப்படும் என்றும் அன்பழகன் ஆலோசனை கூறினார்