பில்லியர்டஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது

233

அசோசியேடட் பிரதர்ஸ் கிளப் மாஸ்டர்ஸ் மாநில அளவிலான பில்லியர்டஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் பரிசுகளை வழங்கினார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அசோசியேடட் பிரதர்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான மாஸ்டர்ஸ் பில்லியர்ட்ஸ் போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது.

பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் இறுதிப்போட்டியில் புவனேஷ் மற்றும் சலீம் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் பரிசுகளை வழங்கினார்.