இந்தோனேஷியா பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார் பிரதமர் மோடி

165

பிரதமர் மோடி இந்தோனேஷியா பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, நள்ளிரவு நாடு திரும்பினார்.

ஜி-20 மாநாடு இந்தோனேஷியாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஜி-20 தலைவர்களிடம் எடுத்துரைத்தார்.

நேற்று நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது. இதை தொடர்ந்து தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் மோடி, நள்ளிரவு டெல்லி திரும்பினார்.