இந்தோனேஷியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

187

இரண்டு நாள் ஜி-20 மாநாடு இந்தோனேஷியாவில் இன்று தொடங்குகிறது. இந்த மாநட்டில் பங்கேற்க இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில், ஜி-20 மாநாடு இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று இந்தோனேஷியா சென்றடைந்தார்.

பாலி விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேஷிய அமைச்சர்கள், அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர். அந்நாட்டு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகுளுடன் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.