மறைந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை நினைவு கூர்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

225

மறைந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை நினைவு கூர்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, பொதுமக்கள் மத்தியில் அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு ஜூலை 12ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற்றது.

இந்நிலையில், ஜப்பான் அரசு சார்பில், ஷின்சோ அபேவின் நினைவேந்தல் நிகழ்ச்சி டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க உலக நாட்டு தலைவர்களுக்கு ஜப்பான் அரசு அழைப்பு விடுதிருந்தது.  அதன்படி, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின், நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் சென்றார்.

ஜப்பான் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா முறைப்படி வரவேற்றார் இதனைத் தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களின் இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, கடந்த முறை தான் ஜப்பான் நாட்டுக்கு வந்தபோது,  மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் நீண்ட நேரம் உரையாடியதை நினைவு கூர்ந்து பேசினார்..