“பெரியார் பிறந்த செப். 17 – சமூக நீதி நாள்”

stalin
Advertisement

தந்தை பெரியார் பிறந்தநாளான செட்பம்பர் 17-ஆம்தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 – வது விதியின் கீழ் இன்று அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா முழுவதும் சமூகநீதி பரவ அடித்தளம் அமைத்தவர் தந்தை பெரியார் என்று கூறினார்.

நாடுமுழுவதும் சமூகப்புரட்சிக்கு பாடுபட்ட தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம்தேதி, சமூக நீதிநாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

தலைமைச்செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் செப்டம்பர் -17 ஆம்தேதி சமூக நீதி்க்கான உறுதி மொழி எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

Advertisement

சமூக நீதிநாளில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உதறித்தள்ளுவோம், பெண்களை சரிசமமாக நடத்துவோம் என உறுதியேற்போம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தந்தை பெரியார் எழுதிய எழுத்தும், பேச்சும், போராட்டங்களும் சமூக நீதி வரலாற்றில் முக்கியப் பங்களிக்கின்றன என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.