உடம்பு வலிக்கு குடிக்கிறாங்க… மது விலையை அரசு குறைக்கணும்… கேபி முனுசாமி வலியுறுத்தல்…!

117
Advertisement

அரசு மதுக்கடைகளில் விலை அதிகமாக இருப்பதே குடிமகன்கள் கள்ளச்சாராயம் குடிக்க காரணம் என கூறியுள்ளார் கேபி முனுசாமி. அரசு மதுக்கடைகளில் விலையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்ட கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 19 பேர் பலியாயுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலியாகியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சாராய ஆறுதான் ஓடுகிறது என்றும் ஆளுங்கட்சியின் அதிகார பலத்தோடு கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதை சொல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகதை இல்லை… விளாசி தள்ளிய அமைச்சர் பொன்முடி!
மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி கமிஷன் பெறுகிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன், மதுவுக்கு எதிராக அதிமுக போராட்டம் நடத்தினால் அதற்கு இணைய தயார் என்றும் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.