வீடியோவுக்காக குழந்தையை பலிகடா ஆக்கும் பெற்றோர்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்….

179
Advertisement

அண்மையில், ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவாறே வீடியோ எடுத்து ‘This is Happiness’ என்ற captionனுடன் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

வண்டி ஓட்டுபவர் ரோட்டை பார்க்காமல் கேமராவை பார்த்து கொண்டே ஓட்டுவது, குழந்தையை  தாய் சரிவர பிடிக்காதது  என  குற்றச்சாட்டுகளை அடுக்கிய நெட்டிசன்கள் views, likesகாக  என்ன வேணா பண்ணுவீங்களா, குழந்தையின் பாதுகாப்பு தான் முக்கியம் என விமர்சனங்களையும் வாரி இறைக்க, இந்த வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.