ரசிகர்களுக்கு அள்ளி அள்ளி அட்வைஸ் வழங்கிய விஜய்! பனையூர் மீட் அப்டேட்

176
Advertisement

‘வாரிசு’ திரைப்படம் பற்றிய எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இன்று நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்கத்தின் குறிப்பிட்ட மாவட்ட நிர்வாகிகளை தனது பனையூர் இல்லத்தில் சந்தித்துள்ளார்.

அடையாள அட்டை வைத்திருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய், ரசிகர்களுக்கு பிரத்தேயகமான சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, ‘வருங்கால முதலமைச்சரே’ போன்ற சர்ச்சைக்குரிய வாசகங்களோடு போஸ்டர் ஓட்ட வேண்டாம் எனவும், வாரிசு மற்றும் துணிவு படங்கள் ரிலீஸ் ஆகும் போது சமூகவலைதளங்களில்  தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை விஜய் தூக்கி வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.