மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்..!

123
Advertisement

மகாராஷ்டிராவில், மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், கொங்கன் பகுதியை சேர்ந்தவர் திலீப். இவர், கடந்த மாதம் 29 ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு மூளையில் பாதிப்பு இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி திலீப்புக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்ததால், திலீப்பின் இருதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட உடல் பாகங்கள் அகற்றப்பட்டது. இதன் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.