“விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனா பரவலை தடுக்க வேண்டும்”

329

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தமிழ்நாட்டில் மூன்று வாரங்களுக்கு முன்பு நாவலூரில் ஒருவர் பிஏ4 வகை வைரசினால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் தற்போது மேலும் 12 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் மட்டு மல்லாமல், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும், குறிப்பாக கர்நாடகா, கேரளா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும்,  உருமாறிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, இதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு கட்டுப்பாடு விதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.