தனியார் பள்ளிகளின் பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

351

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில்  உள்ள  தனியார் பள்ளிகளின் பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருத்தணி வருவாய் கோட்டாட்சியார் சத்யா, உதவி  காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், வட்டார போக்குவரத்து அலுவலர் லீலாவதி ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இதேபோல், பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அரசு விதிமுறைகளின்படி, வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஆர்எஸ் கருவி உள்ளனவா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.