தென் கொரியாவை மிரட்டும் வட கொரிய

268

அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணைகள் சோதனை தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கான ஒத்திகை என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இதனால், தென்கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. ஆளும் தொழிலாளர் கட்சியின் 77வது ஆண்டு விழாவையொட்டி வடகொரிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சோதிக்கப்பட்ட 7 ஏவுகணைகளும், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகவும், நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் சோதிக்கப்பட்ட ஏவுகணைகள் தங்களது இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைகள் சோதனை தென்கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஒரு வெளிப்படையான எச்சரிக்கை என்றும் வடகொரியா தெரிவித்துள்ளதால், தென்கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.