வட கொரியாவில் அடுத்தடுத்து ஏவுகணைகளை சோதனை

208

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்கொரியா கடற்படை, அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கொரிய எல்லையில் நடந்து வரும் இந்த போர்ப்பயிற்சியை கடுமையாக எதிர்க்கும் வடகொரியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் கடந்த 2 வாரங்களாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வடகொரியா நேற்று அடுத்தடுத்து 2 குறுகிய தொலைவு ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணைகளை சோதித்தது.

வடகொரியாவின் வடக்கு கடற்கரை நகரமான முன்சோனில் இருந்து முதல் ஏவுகணையும், அதன்பின்னர் அதே பகுதியிலிருந்து 2-வது ஏவுகணையும் ஏவியுள்ளது. இதனை தென்கொரியா ராணுவம் உறுதிபடுத்தியுள்ளது. வடகொரியா ஏவிய இந்த 2 ஏவுகணைகளும், கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பான் கடலுக்கு இடைப்பட்ட பகுதியில் நீரில் விழுந்துள்ளது. 2 வாரங்களில் வடகொரியா நடத்திய 7-வது ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.