அச்சுறுத்தும் நிபா வைரஸ்

249
virus
Advertisement

கேரளாவில் கொரோனா தாக்கம் உச்சத்தில் உள்ள நிலையில், 12 வயது சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா இரண்டாம் அலையால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது.

இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

நிபா வைரஸ் பரவும் திறன் கொண்டதால், சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு இதேபோன்று கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவல் ஏற்பட்டு 17 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.