புல்தரையில் விளையாடிய புலி

346

நீலகிரி மாவட்டம் முதுமலையில், புலி ஒன்று புல்தரையில் விளையாடிய காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம்  முதுமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலாப் பயணிகள் வாகன சவாரி மூலம் அழைத்து செல்லப்படுவது வழக்கம்.

அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் அழைத்து செல்லப்பட்டபோது, கிராஸ்கட் வனப்பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள புல்வெளியில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று ஓய்வு எடுத்ததுக்கொண்டிருந்தது.

சுற்றுலா பயணிகளை பார்த்த அந்த புலி, சற்று நேரம் சுற்றுலா பயணிகளை கூர்ந்து நோக்கியது.

பின்னர் புல்தரையில் விளையாடியது.

இதனை ஒரு மணிநேரத்துக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.