படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

307

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெகதளாவில் நடைபெற்ற பள்ளி விழாவில் பங்கேற்ற  வனத் துறை அமைச்சர் ‘படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை’ என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நரிக் குறவர், குருவிக்காரர், வேட்டைக்காரர் மற்றும்  லம்பாடி, படுகர் போன்ற சமுதாயத்தினர் 15 லட்சம் பேர் பயனடைய பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர் படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை” என்று தன்னிச்சையாக சொல்வது மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம் என கூறியுள்ளார்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முனைப்புடன் எடுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.