சுற்றுலா சென்ற வாகனத்தை  துரத்திய யானை

367

நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில் சுற்றுலா சென்ற வாகனத்தை  கூட்டத்தில் இருந்த யானை ஒன்று துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாகன ஓட்டுநர் சாதுரியமாக வாகனத்தை பின்நோக்கி இயக்கியதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

இதனை வாகனத்தில் பயணித்த சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.