இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன்.
இவரால் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை, விவசாயிகள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வகையில், ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான பாரம்பரிய நெல் விழா நடைபெறும்.
அந்தவகையில், இந்தாண்டு பாரம்பரிய நெல் விழா, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று தொடங்கியது.
2 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
மேலும் தமிழக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொள்கின்றனர்.
பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி, பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் கண்காட்சி, மரக்பாரம்பரிய உணவு திருவிழா, நாட்டுப்புற மற்றும் பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது.
திருவிழாவிற்கு வரும் விவசாயிகளுக்கு தலா 2 கிலோ வீதம் பாரம்பரிய நெல் விதைகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் பெயரில் விருது வழங்கப்படுவதுடன், அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.