“செந்தமிழ் நாடெனும் போதினிலே”.. பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்

477
  1. சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்ற பாரதியாரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி பாராட்டினார்.

ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக விளங்குகிறார் என்று புகழாரம் சூட்டினார்.

தமிழ்மொழி நிலையானது என்றும், நித்தியமானது என்றும் பேசிய பிரதமர் மோடி, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது என்று தெரிவித்தார்.

தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் மேலும் பிரபலப்படுத்தப்படுவதற்கு, மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ் கலாச்சாரத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

செம்மொழி மையத்தில் புதிய வளாகம் திறக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதற்கு முழுக்க முழுக்க மத்திய அரசுதான் நிதி வழங்குகிறது என்றார்.

பிராந்திய மொழிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையில் வகை செய்யப்பட்டுள்ளது என்றும் மோடி குறிப்பிட்டார்.

புதிய தேசிய கொள்கை மூலம் பொறியியல் மற்றும் மருத்துவத்தை பிராந்திய மொழியிலேயே கற்க இயலும் என்றும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது என்றும், சமூக கட்டமைப்புகளை மேம்டுத்துவதன் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடையும் என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள தற்போதைய நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது என்றும், இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையான உதவிகளையும் அளித்து வருகிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.