டெல்டா மாவட்டங்களில் 2வது நாளாக இன்றும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.
அதன்படி, நாகை மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், கருவேலங்கடை கிராமத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வந்த கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மின்கல தெளிப்பான், கைத்தெளிப்பான், தார்ப்பாய், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனையடுத்து, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.