“மஞ்சள் ஜெர்ஸியை மீண்டும் போட மனது விரும்பியது” – உருக்கத்துடன் ரெய்னா பேச்சு

523
Advertisement

கடந்த 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை அணிக்காக அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன். மொத்தம் 5528 ரன்கள் எடுத்துள்ளார். இருந்தும் நடப்பு சீசனுக்கான மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை.

இந்நிலையில் அவர் நடப்பு சீசனை பிராட்காஸ்ட் செய்யும் நிறுவனத்தில் இந்தி மொழி வர்ணனையாளராக தனது புதிய ரோலை தொடங்கியுள்ளார். தனது முதல் அசைன்மெண்டின்போது கமெண்ட்ரி பாக்ஸில் உருக்கமாக பேசியுள்ளார்.

“இந்த ஷோவுக்காக மைதானத்தை நான் கடந்து வந்துபோது என் மனதில் ஒன்று பட்டது. மீண்டும் மஞ்சள் ஜெர்ஸியை போட்டுக் கொண்டு மைதானத்துக்குள்போக எனது மனம் விரும்பியது” எனத் தெரிவித்துள்ளார் ரெய்னா. சென்னை அணியை தோனிக்கு அடுத்ததாக வழிநடத்தியவர் ரெய்னா. இப்போது ஜடேஜா அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.