வாட்ஸ்அப் குழுக்களில் இனி வாக்கெடுப்பா ?

339
Advertisement

உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற ஆப் என்றால் வாட்ஸ்-அப் தான் . பிரபல மேட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக தற்போது முன்னணியில் உள்ளது. டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல அப்டேட்களுக்கு பிறகு மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. அந்த வரிசையில், அடுத்து வரப்போகும் அப்டேட்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் குழுவிற்குள் போலிங் எனும் வாக்கெடுப்பை அனுமதிக்கும் புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இது வாட்ஸ் அப் குழுவில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் தனிப்பட்ட சாட்களில் இதை அறிமுகப்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதானால்தான் வாட்ஸ் அப் குழுக்களுக்கு மட்டும் இது கொண்டுவரப்பட உள்ளது.வாட்ஸ் அப் தனிப்பட்ட சாட்களில் இதை அறிமுகப்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதானால்தான் வாட்ஸ் அப் குழுக்களுக்கு மட்டும் இது கொண்டுவரப்பட உள்ளது. ஒரு வாட்ஸ் அப் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வாக்கெடுப்பு மற்றும் முடிவுகளை பார்க்க முடியும்.மேலும் சில குறிப்பிடத்தக்க அப்டேட்கள் விரைவில் வர உள்ளது.

இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்கில் இருப்பது போல மெசேஜ் ரியாக்‌ஷன் விரைவில் வாட்ஸ் அப்பில் வரவுள்ளது. மெசேஜுக்கு ரியாக்ட் செய்யும் வகையில் இந்த் அப்டேட் வரவுள்ளது. மேசேஜை அழுத்திப்பிடித்தால் சில எமோஜிக்கள் ஸ்கிரீனில் தெரியும். நாம் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் , டாக்குமெண்ட் வகை போட்டோ, வீடியோவை ஷேர் செய்தால் அதனை ஓபன் செய்யாமல் பார்க்க முடியாது. அதற்கான ப்ரிவியூ வராது. ஆனால் விரைவில் ப்ரிவியூ பார்க்கும் அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் டாக்குமெண்ட் வகை வீடியோ, புகைப்படத்தை அனுப்பும் முன் ப்ரிவியூ பார்க்கலாம்.