“குரங்கு அம்மை அறிகுறி இருந்தால் உடனே தனிமைப்படுத்த வேண்டும்”

305

மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருவதாக அறிவித்துள்ளதையடுத்து, பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என கூறியுள்ளார்.

இதுவரை கண்டறியப்படாத தோலில் ஏற்படும் கொப்புளங்கள் உடையவா்களையும், அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், மற்றும் கனடா,  போர்ச்சுகல்,  ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 21 நாள்களுக்கு முன்னா் தமிழகம் வந்த பயணிகளில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவா்கள் அல்லது அறிகுறி உள்ளவா்களும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களையும், தனிமைப்படுத்தி உயா்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவா்களின் ரத்தம், சளி மற்றும் கொப்புளங்களின் மாதிரிகளை குரங்கு அம்மை ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டும் என்றும், அந்த ஆய்வில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டால், கடந்த 21 நாட்களுக்கு அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன்  அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.