12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

mk stalin
Advertisement

நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: “கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையிலான சேர்க்கை செயல்முறை, சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையை இணைத்து அனுப்புவதாக, அக்கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.