50 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

117
Advertisement

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில அமைச்சர்கள்,  திமுக முன்னோடிகள் மற்றும் முதலமைச்சரின் உறவினர்களின் சொத்து விவரங்களை அண்மையில் வெளியிட்டார். 

  இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ;ஸ்டாலின் நோபல் ஸ்டீல் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார் என்று குறிப்பிட்டு, சொத்து விவரங்களை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக அண்ணாமலைக்கு உதயநிதி ;ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் அண்ணாமலை கூறியபடி நோபல் ஸ்டீல் நிறுவனத்தில் தாம் எந்தக் காலத்திலும் இயக்குநராக பணியாற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

  தவறான தகவல் வெளியிட்ட அண்ணாமலை அடுத்த 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் 50 கோடி ருபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்று அண்ணாமலைக்கு  உதயநிதி  அனுப்பியுள்ள நோட்டீசில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.