காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லில் இருந்து நேரடியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது.
அதன்காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 417 கன அடியில் இருந்து, 10 ஆயிரத்து 410 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.