Advertisement

காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை 112.77 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 115.35அடியாக உள்ளது.

நீர் இருப்பு 86.24 டிஎம்சியாகவும், நீர்வரத்து 46 ஆயிரத்து 353 கன அடியாகவும் உள்ளது.

அணையில் இருந்து 1500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

காவிரி நீர்வரத்து தற்போதைய நிலையே தொடர்ந்தால் இம்மாத இறுதிக்குள் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டினால் வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12க்கு முன்பாகவே பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.