மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

417

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.53 அடியாக உள்ள நிலையில், அணையில் நீர் இருப்பு 83.52 டி.எம்.சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4 ஆயிரத்து190 கன அடியில் இருந்து 3 ஆயிரத்து 672 கன அடியாக குறைந்துள்ளது.