ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தற்காலிக நிறுத்தம்

149

மேல் மருவத்தூர் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 நாட்கள் கால அவகாசம் கோரியதால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர் மற்றும் சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்க மீது விசாரணை நடைபெற்ற நிலையில், ஆக்கிரமிப்புகளை வரும் 15-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் சென்ற நிலையில், மூன்று நாட்கள் கால அவகாசம் தருமாறும், திடீரென வீடுகளை காலி செய்ய சொன்னால் வேறு எங்கும் செல்ல முடியாது என்றும் அப்பகுதி மக்கள் கேட்டு கொண்டதால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.