மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆனந்தபுரம் என்ற இடத்தில் நெல் விதைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
விவசாயிகளோடு கலந்துரையாடி, ஊர்மக்களின் குறைகளையும் முதல்வர் கேட்டறிந்தார்.
டெல்டா மாவட்டங்களில் இன்று காலைமுதல் ஆய்வுப்பணியை மேற்கொண்டுள்ள முதல்வர், ஆனந்தபுரம் கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், நெல்விதைப்பு பணியையும் முதல்வர் பார்வையிட்டார்.
அந்த கிராமத்து மக்களிடம் குறுவை சாகுபடி பணி, நெல் விதைப்புப்பணி, உரவிநியோகம், பாசன நீர் வரத்து ஆகியவை குறித்து முதல்வர் விசாரித்தார்.
பின்னர், சிறுவர்கள், பெண்களோடு கலந்துரையாடிய முதல்வர் வயல்களில் சாகுபடி பணியை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து, திருக்கடையூர் கிராமம், நல்லாடை கிராமம் ஆகிய பகுதிகளில் இயந்திர நடவுப்பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.