ஜூன் 19 – மாநில அளவிலான மாரத்தான்

421
Marathon
Advertisement

Sports pro & Tamilnadu athletic இணைந்து நடத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான மாநில அளவிலான மாரத்தான் போட்டி வரும் ஜூன் 19ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பிரபலங்கள், ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

அதேபோல் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் கோவை மற்றும் திருச்சியில் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

மாநில அளவிலான இந்த மாரத்தான் போட்டிக்கு சென்னை Coastal Rotary Club தலைவர் மஞ்சித் சிங், Sports pro இயக்குனர் சபரி நாயர், நிகழ்ச்சியின் பொது மேலாளர் சோனாலி ஜெயின் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்துள்ளனர்.