மதுராந்தகம் ஏரியில் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

227

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் என 50 ஆண்டுகால கோரிக்கை வலுத்து வந்தது.

தற்போது இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, இதற்காக  120 கோடியே 24 லட்சம் ரூபாயை ஒதுக்கியது.

இதனையடுத்து மதுராந்தகம் ஏரியை தூர்வாரும் பணியிணை  அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்.

மேலும் மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி, ஏரிக்கரை மற்றும் மதகுகள் ஆகியவற்றை சரிசெய்யும் பணியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் 2 ஆண்டுக்குள் முடிக்கப்டும் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.