இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளது

232

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தின்  மூலம் பள்ளிகளில் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின் மூலம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதன் மூலம் பயன்பெற்று குணமடைந்த மாணவ, மாணவிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 70 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக தெரிவித்தார்.

இதன் முலம், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.