விசாரணைக்கைதி ராஜசேகர் மரண வழக்கை விசாரிக்க CBCID DSP சசிதரன் நியமனம்

335

விசாரணைக்கைதி ராஜசேகர் மரண வழக்கை விசாரிக்க CBCID DSP சசிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, காவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கு CBCIDக்கு மாற்றம் செய்யப்பட்டதால், வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறை நேற்று CBCID அலுவலகத்தில் ஒப்படைத்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக DSP சசிதரனை நியமனம் செய்து CBCID DGP உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, CBCID DSP சசிதரன் தலைமையிலான போலீசார் இந்த வழக்கை விசாரிக்க உள்ளனர்.