கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் ஏராளமான வன விலங்குகள் இறந்துள்ளன

258

கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருவதால் 205 யானைகள், 550 காட்டெருமைகள், 430 வரிக்குதிரைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் இறந்துள்ளன.

கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி 40 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியால் கென்யாவில் யானைகள் அடுத்தடுத்து இறந்து வருவதாக உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. போதுமான நீர் மற்றும் உணவு இல்லாததால் யானைகளும், யானைக் குட்டிகளும் நிற்கக்கூட முடியாமல் சிரமப்படும் வீடியோ காட்சிகளை அந்த அமைப்பு பகிர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களில் மட்டும் வறட்சியால் 205 யானைகள் இறந்துள்ளதாக கென்யாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் பெனினா மலோன்சா தெரிவித்துள்ளார். 550 காட்டெருமைகள், 430 வரிக்குதிரைகள், 12 ஒட்டகச்சிவிங்கிகள் என ஏராளமான வன விலங்குகள் இறந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.