கருமுட்டை விவகாரம் – 8 மருத்துவமனைகளுக்கு சம்மன்

236

ஈரோட்டில் 16- வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை விற்பனை செய்த பிரச்சனை குறித்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, ஈரோட்டில் உள்ள இரண்டு மருத்துவமனைகள், மற்றும் சேலம், ஓசூர், திருச்சி, ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

கர்நாடகா, ஆந்திரா ஆகியமாநிலங்களில் உள்ள மருத்துமனைகளுக்கும் நேரடியாக சென்று விசாரணை நடத்த இருப்பதாகவும் டிஐஜி தெரிவித்தார். கருமுட்டை விற்பனை செய்வது குறித்த தகவல் தெரிந்தால், காவல்துறைக்கு பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் டி.ஐ.ஜி. முத்துசாமி கூறினார்