கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் அதிரடி கைது

153
Karthi-Chidambaram
Advertisement

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை வீடு உள்பட மும்பை, ஒடிசா, கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 10 இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, பஞ்சாப் மாநிலம், மான்ஸா பகுதியில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வந்த மின் திட்டப் பணிகளில் வேலை செய்ய 263 சீனர்களுக்கு முறைகேடாக ஒரே மாதத்தில் விசா வழங்க 50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக கார்த்தி சிதம்பரம் உள்பட 5 பேர் மீது சிபிஐ காவல்துறையினர் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சிபிஐ காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.