கர்நாடகா தேர்தல் முடிவுகள்: மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமா?

159
Advertisement

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இந்தியா முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தேசிய அரசியலில் கடந்த ஓரிரு மாதங்களாக கர்நாடக தேர்தல் விவகாரம் தான் பேசுபொருளாக இருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்திருந்தாலும் தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர வேறு மாநில பாஜக ஆட்சியில் இல்லை. எனவே மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்க முயற்சி மேற்கொண்டது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்கள் பெற்றால் ஒரு கட்சி பெரும்பான்மை மாறும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி 118 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 70 இடங்களிலும், மஜக 30 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஆனால் கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே சமயம் உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அங்கு பரவலாக பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.

தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய பல்வேறு கருத்துக் கணிப்புகளின் சராசரி அளவை பிரதிபலிக்கும் வகையில் முன்னிலை விவரங்கள் உள்ளன. முடிவுகளும் அவ்வாறே இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.