காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் பகுதியில் தனியார் அகாடெமி மையத்தில் மாணவர்களின் திறன் மேம்பாட்டை வளர்க்கவும், கோடை விடுமுறையை பயனுள்ளதாக ஆக்கவும் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள கராத்தே பயிற்சி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பயிற்சி பெற்றனர்.
இவர்களுக்கு அட்வான்ஸ் கட்டா கேம்ப் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கராத்தே சங்கத்தின் நிர்வாகிகள் பயிற்சி அளித்தனர்.
இதன்மூலம் மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை உண்டாக்கும் வகையில் அட்வான்ஸ் கட்டா கேம்ப் அமையுமென தெரிவிக்கப்பட்டது.