விளை நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்

275

குமரி மாவட்டத்தில் விளை நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் ஏராளமான வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

தாடகை மலையில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், தெள்ளாந்தி அருகே உள்ள விளை நிலங்களில் புகுந்தது.

அந்த யானைகள் 700க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், ஏராளமான தென்னை மரங்களை அழித்து சேதப்படுத்தின.

இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், யானைகள் விளை நிலங்களில் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.