கலைஞர் நூலகம் – நேரில் பார்வையிட்ட முதலமைச்சர்

273

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது.

இடம் தேர்வு செய்யப்பட்ட போது நேரில் பார்வையிட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், கட்டுமான பணிகளை முதன்முறையாக நேரில் பார்வையிட்டார்.

ஆய்வின் போது, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, அன்பில் மகேஷ், மூர்த்தி, பெரிய கருப்பன், மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.