கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சர் பெயரை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் இன்று அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது….

132
Advertisement

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாரும் உள்ளனர். டெல்லியில் முகாமிட்டுள்ள இருவரும், மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், முதலமைச்சர் குறித்த முடிவை இதுவரை கார்கே எடுக்கவில்லை என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை கலந்து ஆலோசித்து, இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சர் பெயரை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் இன்று அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.