பாஜக உடன் கூட்டணி உடைகிறதா? கூட்டத்தில் எடப்பாடி சொன்ன வார்த்தை.. உற்சாகமான அதிமுக மா.செ.க்கள்

83
Advertisement

பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிமுக பாஜக கூட்டணி உடைகிறதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது
இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்,அண்ணாமலைக்கு எதிராக மாவட்ட செயலாளர்கள் கொந்தளித்து பேசிய போது, அவர்களை சமாதானம் செய்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை குறித்து பாஜக மேலிடம் அதிமுக சார்பில் புகார் அளித்துள்ளது, சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் கூட்டணியை மறுபரிசீலனை செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பேசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அளித்த பேட்டி, அதிமுகவினரிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.