பார்வையற்றவர்களுக்கான புதுமையான தொடு உணர்வுப் பூங்கா

244
Advertisement

பார்வைத் திறன் அற்றவர்களுக்கென்றே தனியாக ஒரு பூங்கா
சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில், கோட்டூர் கார்டன் முதல் குறுக்குத்
தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள
இந்தப் பூங்காவில் சாதாரணக் குழந்தைகளைப்போல் மாற்றுத்திறனாளிகள்
ரசித்து மகிழலாம்.

மூளை வளர்ச்சி, புற உலக சிந்தனை குறைந்த குழந்தைகள் ஆகியோரின்
திறன் மேம்பட நடைப்பயிற்சிக்கான இடம், பெருமூளை, வாதக் குறைபாடு
உள்ள குழந்தைகள் ஆடிமகிழ கூடை ஊஞ்சல், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும்
குழந்தைகள் சக நண்பர்களுடன் மணலில் தனியாக விளையாடக்கூடிய பகுதி போன்றவை
இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

சக்கர நாற்காலி ஊஞ்சலில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் ஊஞ்சலாடும் வசதி,
கூடைப்பந்து விளையாடும் வசதி ஆகியவையும் இந்தப் பூங்காவில் உள்ளன.

பார்வைக் குறைபாடு மற்றும் சாதாரணக் குழந்தைகள் விளையாடுவதற்காகத்
தொட்டால் ஒலியெழுப்பும் குழாய்கள், தொலைபேசி வசதி, இருக்கைகளுடன்
மேஜை விளையாட்டுகள் போன்ற வசதிகளும் இங்கு உள்ளன.