இந்தியாவின் முதல் APPLE ஷாப்! திடீர் SURPURISE கொடுத்த CEO ! மிக பழமையான Apple computer பரிசு!

46
Advertisement

மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் இந்தியாவின் முதல் ஆப்பிளின் சில்லரை விற்பனை கடைக்கு பிரமாண்டமாக திறப்பு விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் இந்த விழாவிற்கு வருகை தந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்(tim cook)  கடையை திறந்து வைத்துள்ளார்.

கடந்த திங்களன்று ட்விட்டரில் மும்பை ஸ்டோரில் இருந்து தனது குழுவுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில் “ஹலோ, மும்பை! நாளை புதிய ஆப்பிள் பிகேசி (பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ்) எங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்” என தெரிவித்திருந்தார்.