“பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய சூப்பர்சோனிக் ஏவுகணை”

363
Advertisement

இந்திய ராணுவத்தால் சோதனை செய்யப்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணை பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் சுமார் 124 கிலோமீட்டர் நுழைந்தது என பாக். ராணுவம் தெரிவித்து உள்ளது.

இலக்கு தவறி இந்திய ஏவுகணை பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் மியா சின்னு என்ற இடத்தில் விழுந்ததாக தகவல்.

பாக்.ராணுவத்தின் உளவுப்பிரிவு உயரதிகாரி பாபர் இஃப்திகார் , ஏவுகணை தாக்கிய வான்பகுதியிலும் நிலப்பகுதியிலும் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என தெரிவித்து உள்ளார்.

இந்திய ராணுவ தரப்பில் ஏவுகணை தாக்குதல் குறித்து அதிகாரபூர்வமாக எந்தவிதமான தகவலும் இதுவரை
தெரிவிக்கப்பட வில்லை.

சர்வதேச வான்பரப்பு விதிமுறைகளை இந்திய ராணுவம் மீறியிருப்பதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.